அலங்காநல்லூர் பகுதியில், தீரன் சின்னமலை நினைவு தினம்

தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் , உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 218வது நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவ சிலைக்கு, கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாஜன சங்க தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதைப்போலவே, அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டத் தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பாட்டாளி மக்கள் சார்பில் மாவட்டத் தலைவர் செல்லம்பட்டி முருகன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரோஜினி, முன்னாள் மாவட்ட தலைவர் அழகுராஜா, ஒன்றிய செயலாளர்கள் முருகன், ஈஸ்வரன், முன்னிலையில் மாவட்ட துணைத் தலைவர் ராமசந்திரன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபானி, ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோன்று, அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஒன்றியச் செயலாளர் சேது சீனிவாசன் தலைமையில் மாவட்டச் செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் துதி திருநாவுகரசு ஆகியோர் முன்னிலையில் ஒன்றியச் செயலாளர்கள் ஜோதிமுருகன், முத்து கிருஷ்ணன், சேகர், அவை தலைவர் அய்யாவு, ஒன்றிய துணைத் தலைவர் முனியசாமி, வர்த்தகர் பிரிவு பெருமாள், மாவட்ட இலக்கிய அணி சேகர், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் பாலமேடு அய்யாவு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu