குடிநீர் வழங்க கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

குடிநீர் வழங்க கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

வாடிப்பட்டி அருகே குடிநீர் வழங்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

வாடிப்பட்டி அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமம் மேலத்தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் ஆறு மாத காலமாக குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் மத்திய அரசு திட்டமான ஜல்ஜீவன் திட்டம் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற அடிப்படை திட்டங்கள் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறி, பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கையாகவும், மணுவும் அளித்துள்ளனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை குடிநீருக்காக, ஆறு மாத காலம் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்றும் சைக்கிளில் சென்றும் குடிநீர் எடுத்து வருவதாக கூறும் போது, மக்கள் இவ்வாறு தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வருவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப் புவதிலும் மக்கள் வேலைக்கு செல்வதிலும் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

முறையாக குடிநீர் வழங்கா விட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறினர்.

Tags

Next Story