அடிப்படை வசதிகள் கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அடிப்படை வசதிகள் கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
X

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

சோழவந்தான் அருகே அடிப்படை வசதிகள் கோரி ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, மேலக்கால் கிராமத்தில் உள்ள தெற்கு தெரு பகுதியான பாஸ்கரன் தெருவில் குடிநீர் தெருவிளக்கு ரோடு மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்ககோரி, இப்பகுதி மக்கள் 20 ஆண்டாக தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாண்டியன் அப்பகுதிக்கு ஆய்வு செய்ய வந்திருந்தார். அப்போது அப்பகுதி மக்கள் ஆணையாளரிடம் குடிநீர் மற்றும் தெருவிளக்கு, பேவர் பிளாக் அமைத்துத்தரக்கோரி நேரடியாக முறையிட்டனர்.

அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியிலிருந்து, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் வரை ஆக்கிரமிப்பை அகற்றி முறையாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், நாங்கள் குடியிருக்க கூடிய பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் தெருவிளக்கு ரோடு மற்றும் கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால், பல்வேறு சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம். நாங்களும், எங்கள் வார்டு உறுப்பினரிடம் பலமுறை கூறி உள்ளோம். அதற்கு எங்கள் வார்டு உறுப்பினர் எனக்கா ஓட்டு போட்டீர்கள் என்று ஏளனமாக பேசி எங்களை புறக்கணித்து வருகிறார்.

ஆகையால் நாங்கள் வாடிப்பட்டி ஆணையரிடம் தெரிவித்தோம். அவர் எங்களது கோரிக்கையை ஏற்று நாங்கள் குடியிருந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார் .எங்களது கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காண்பதாக கூறிச் சென்றுள்ளார்.

நாங்கள் 20 ஆண்டுகளாக எப்படி நம்பி இருந்தோமோ இதேபோல், தற்போது அதிகாரி கூறியுள்ளதையும் நம்பி உள்ளோம். ஒருவேளை எங்களது கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் செய்ய முடிவு செய்து உள்ளோம். தற்பொழுது, கூட அதிகாரிகள் வந்தபோது வார்டு உறுப்பினர்கள் யாரும் வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!