திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகத்தில் அமைந்துள்ள விவேகானந்தா கல்லூரியில், ஏப்ரல் 2020 மற்றும் ஏப்ரல் 2021 ஆம் ஆண்டில் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார். இயற்பியல் துறை பேராசிரியர் மற்றும் தேசிய மாணவர் படையின் அதிகாரி கேப்டன் ராஜேந்திரன் ஒருங்கிணைப்போடு, கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் தலைமை விருந்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பட்டமளிப்பு விழாவை, கல்லூரிச் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்தா தொடக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் பட்டங்களை வழங்கி பேசினார்.
முறையாக துறைத்தலைவர்கள் அந்தந்த துறையின் பட்டதாரிகளின் பெயர்களை வாசிக்க 453 பட்டதாரிகள் சிறப்பு விருந்தினரிடம் இருந்து பட்டங்களை பெற்றுக் கொண்டனர். அடுத்த நிகழ்வாக, முதல்வர் வெங்கடேசன் பட்டமளிப்பு விழாவின் உறுதி மொழியினை பட்டதாரிகளுக்கு வாசிக்க, பட்டதாரிகள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.
விவேகானந்தா கல்லூரியின் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் சஞ்சீவி மற்றும் அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு மற்றும் மாணவ, மாணவிகள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu