குட்லாடம்பட்டி தாடக நாச்சியம்மன் அருவியில் சீரமைப்பு பணிகள்; ஆட்சியர் ஆய்வு

குட்லாடம்பட்டி தாடக நாச்சியம்மன் அருவியில் சீரமைப்பு பணிகள்; ஆட்சியர் ஆய்வு
X

வளர்ச்சிப்பணிகளை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர்.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

மேலும், ஜல் ஜீவன் மின் திட்டத்தின் கீழ், ரூபாய் 18.96 இலட்சம் மதிப்பீட்டில் 115 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளையும், ஊராட்சி பொதுநிதியின கீழ் ரூபாய் 9.50 இலட்சம் மதிப்பீட்டில் சமத்துவபுரம் சாலை மேம்படுத்தும் பணியினையும், குட்லாடம்பட்டி ஊராட்சி தாடக நாச்சிபுரத்தில் ஜல் ஜீவன் மின் திட்டத்தின் கீழ் ரூபாய் 7 இலட்சம் 70 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளையும், ஊராட்சி பொதுநிதியின் கீழ் ரூபாய் 5.50 இலட்சம் மதிப்பீட்டில் 3,7 மற்றும் 8 ஆகிய தெருக்களை மேம்படுத்தும் பணியினையும் மற்றும் ஆண்டிப்பட்டியில மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 1.72 இலட்சம் மதிப்பீட்டில் 200 மரக்கன்றுகள் நடும் பணியினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

முன்னதாக, குட்லாடம்பட்டி அருவியில் வாகன நிறுத்துமிடம், தடுப்பு சுவர், கண்காணிப்பு கோபுரத்திலிருந்து அருவிக்கு செல்லும் பாதையில் பழுதடைந்துள்ள மரப்பாலத்தினை சரிசெய்தல், நுழைவு வாயிலுக்கு அருகில் புகைப்படம் எடுக்கும் இடத்தினை அமைத்தல் ஆகியவைகளையும் அவர் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து, நுழைவு சீட்டு வழங்கும் இடம், சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் சுற்றுலாவை மேம்படுத்தவும், நடைபாதைகளில் பாறைகளை வெட்டி வைத்து பாதை அமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை சுற்றுலாத்துறை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில், மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜன், வாடிப்பட்டி வட்டாட்சியர் நவநீதன் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தின கலாவதி, பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story