சோழவந்தான் அருகே, கண்மாய் ஆக்கிரமிப்பால், விவசாயம் பாதிப்பு..!
மதுரை, சோழவந்தான் அருகே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கண்மாய் பகுதி
சோழவந்தான் அருகே, கண்மாய் ஆக்கிரமிப்பு காரணமாக விவசாயப் பணிகள் தொடங்குவதில் தாமதம்:
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,ரிஷபம் ஊராட்சியில், ரிஷபம் திருமால் நத்தம் ராயபுரம் ஆகிய கிராமங்களில், உள்ள 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கான, பாசனத்திற்கு தேவைப்படும் தண்ணீரானது கட்டக்குளம் அருகே உள்ள கண்மாயிலிருந்து வருகிறது.இந்த கன்மாயானது சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், மேட்டுமடை, பள்ளமடை, செங்கல் மடை ஆகிய மூன்று மடைகள் உள்ளது.இதில், மேட்டுமடை, செங்கல் மடையில் சிறிதளவு தண்ணீர் வருகிறது. பள்ளமடையில் தண்ணீர் சுத்தமாக வருவதுஇல்லை .
இது குறித்து ரிஷபம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் பழனியப்பன் கூறுகையில் :கடந்த 3ஆம் தேதி பேரனை முதல் கள்ளந்திரி வரை ஒருபோக பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆங்காங்கே உள்ள கண்மாய் நிரம்பி அதன் மூலம் விவசாய நிலங்களில் பாசன வசதிக்கு பயன்படுத்த வேண்டும்.
சோழவந்தான் அருகே,ரிசபம் ,திருமால் நத்தம், ராயபுரம் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கு, கட்டக்குளம் அருகே உள்ள கண்மாயிலிருந்து தண்ணீரானது வரவேண்டும். ஆனால், கண்மாயின் 80 சதவீத பகுதி தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதால், கால்வாய் வழியாக கன்மாய்க்கு தண்ணீர் வருவதில் தடைகள் உள்ளது. மேலும், அவ்வாறு சிறிதளவு வரும் தண்ணீரும் கன்மாயிலிருந்து விவசாய நிலங்களுக்கு வருவதில் தடைகள் உள்ளது.
இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரின் கவனத்திற்கு கிராமத்தின் சார்பாக பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரைஎந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும்,தண்ணீர் வரும் பகுதியில்சிறிய பைப் குழாய்களை வைத்து தண்ணீர் வரும் வழிகளை அடைத்துள்ளதால், விவசாயத்திற்கு தண்ணீர் கிடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகையால்,இந்த கன்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஜேசிபி மூலம் அகற்றி கால்வாய்களை சரி செய்து 500 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கும் இந்த பகுதி விவசாயிகளின் வாழ்
வாதாரத்தை பாதுகாக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu