/* */

சோழவந்தான் அருகே ஆதி மாசாணியம்மன் கோயிலில் தைமாதத் திருவிழா

ஆதி மாசாணியம்மன் கோயிலி தை மாதம் திருவிழாவை முன்னிட்டு இன்று வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே  ஆதி மாசாணியம்மன் கோயிலில் தைமாதத் திருவிழா
X

சோழவந்தான் அருகே உள்ள குருவிதுறையில் பிரசித்தி பெற்ற ஆதி மாசாணியம்மன் கோவிலில்  இன்று காலை வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழவந்தான் அருகே குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் திருவிழா வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வழிபாடு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவிதுறையில் பிரசித்தி பெற்ற ஆதி மாசாணியம்மன் கோவில் உள்ளது. வருடந்தோறும் தை மாதம் திருவிழா நடைபெறும். நேற்று இரவு மயான பூஜை உடன் தொடங்கி இன்று காலை வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகத்தினை பூசாரி சின்னமாயன் சுமந்து வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து திருக்கோவிலில் மாசாணி அம்மனுக்கு படையல் இட்டு பூஜைகள் செய்யப்பட்டது ‌. நாளை திங்கட்கிழமை கோவில் முன்பாக பூக்குழி இறங்கும் வைபவமும். செவ்வாய் அன்று சக்தி கரகம் கரைத்தல் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மேல் கருப்புசாமி முனியாண்டி சாமிகளுக்கு மறு பூஜை நிகழ்வு நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதி மாசாணி அம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

சிறுதெய்வ வழிபாடுகள் எந்தவித கோட்பாடுகளுக்கும் உள்ளடங்காமல் கிராம மக்கள் விரும்பிய வண்ணம் நிகழ்த்தப்படுகின்றன.

சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் தெய்வங்களுக்குத் தகுந்தவாறு வேறுபடும். ஒவ்வொரு தெய்வமும் தனக்கெனத் தனித்த வழிபாட்டு முறைகளைக் கொண்டிருக்கும். சிறுதெய்வ வழிபாடுகள் என்பது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களில் நடைமுறையில் உள்ள வழிபாடுகளே.சிறுதெய்வ வழிபாடுகளில் தெய்வங்களை அலங்கரித்தல், பூஜை செய்தல், படையல் போடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், ஆடியும் பாடியும் துதித்தல் போன்றவை வழிபாட்டு முறைகளாக அமைகின்றன.

ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனியே ஓர் தெய்வங்கள் இருக்கும். உதாரணமாக ஊர்பொதுவில் இருக்கும் மாரியம்மன், கருப்பர், ஐய்யனார், முனியப்பன் போன்ற தெய்வங்கள் இருக்கும். இந்த ஊர் தெய்வங்களுக்குக் கிராம மக்கள் எடுக்கும் திருவிழா பெரிய கும்பிடு என அழைக்கப்படுகிறது.

பெரியகும்பிடை அடிப்படையாகக் கொண்டே சடங்குகளும், நேர்த்திக் கடன்களும் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமங்களில் பஞ்சம், வறட்சி, நோய்த் தொற்று போன்றவை ஏற்பட்டால் பெரிய கும்பிடு நடத்தப்படுகிறது. இது பெரிய கும்பிடு, சாமி கும்பிடு, ஊர்த் திருவிழா, கொடை விழா, பெரிய நோம்பி என்று பல பெயர்களில் குறிப்பிடப்படும்.

பெரிய கும்பிடு வழிபாட்டு முறைகள்:சாமி உத்தரவு கேட்டல்,காப்புக்கட்டுதல்,கம்பம் நடுதல்,முளைப்பாரி போடுதல், வேப்பிலை தோரணம் கட்டுதல், கிடாய் வெட்டுதல்,பொங்கல் வைத்தல்,நேர்த்திக்கடன் செலுத்துதல்,மஞ்சள் நீராடுதல் கலை நிகழ்ச்சிகள் என திருவிழாவில் பலநிலைகள் உள்ளன.

சக்தி கரகமெடுத்தல் : பொதுவாக சிறுதெய்வங்களுக்கு சிலைகளோ, வடிவங்களோ இருக்காது. எனவே கரகத்தில் சாமியை எழச்செய்து கோயிலில் கொண்டுவந்து வைக்கும் சடங்கே சக்திக் கரகம் எடுத்தல் எனப்படும். இதன் பின்னரே வழிபாடுகளும், சடங்குகளும் நடைபெறும். பூஜைகள் நிகழ்த்துவதன் மூலம் அக்கரகத்தில் தெய்வம் எழுந்தருளும். அதுவே தெய்வமாகவும் வணங்கப்படும். மக்கள் அளிக்கும் படையலையும், சடங்குகளையும் அத்தெய்வம் ஏற்றுக் கொள்ளும்.

பலியிடுதல்:சிறுதெய்வ வழிபாட்டில் பலியிடலும், மாமிசப் படையலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பலியிடல் என்பது தொன்று தொட்டு இருந்துவரும் ஒரு சடங்கு முறையாகும். ஓர் உயிரைக் கொடுப்பதன் மூலம் இன்னொரு உயிர் காப்பாற்றப்படுகிறது. பாதுகாக்கப்படுகிறது. வளம் பெறுகிறது என்ற நம்பிக்கையே பலியிடலுக்கு அடிப்படையாக அமைகிறது.

நேர்த்திக்கடன்: எது நடந்தாலும் அது தெய்வங்களின் மூலமே நடைபெறுகிறது என்று மக்கள் நம்புகின்றனர். இதனால் பலவிதமான வேண்டுதலை இறைவன் முன் வைக்கின்றனர். அவ்வேண்டுதல் நிறைவேறினால் அதற்குப் பிரதிபலனாக நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்

Updated On: 29 Jan 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!