திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அதிமுக ஆட்சியில் முடக்கவில்லை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அதிமுக ஆட்சியில் முடக்கவில்லை என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் வாடிப்பட்டியில் மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் எம் எல் ஏ.தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .
இதில், மாவட்டச்செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் பேசியதாவது: உலக அரசியல் இயக்கத்திற்கு இன்றைக்கு இலக்கணமாய் இந்த இயக்கம் திகழ்கிறது ஜனநாயகத்துக்கு உயிர் கொடுத்து வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படடும் வகையில் சரித்திர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. நடைபெற்ற கழக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் ஜனநாயக முறைப்படி கழக ஒருங்கிணைப்பாளராக, ஓபிஎஸ், கழக இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் , வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். தற்போது, இந்த பணி அவர்களுக்கு சவாலான பணியாக இருந்தாலும், அதனை கழக 2 கோடி தொண்டர்கள் ஆதரவோடு சாதனையாக மாற்றிக் காட்டுவார்கள்.
அம்மா ஆட்சியில், கொண்டுவர கொண்டுவரப்பட்ட திட்டங்களான அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்க நினைக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உழவர்சந்தை, சமத்துவபுரம் போன்ற திட்டங்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் முடக்கவில்லை. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 29 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் விலை குறைக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது, ஆறு மாதங்கள் ஆகியும், திமுக தேர்தல் வாக்குறுதியை எதையும் நிறைவேற்றவில்லை.
கடந்த ஐந்தாம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவாலயத்தில் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மரியாதையை செய்து திரும்புகின்றபோது, கயவர் கூட்டம் ஜெயலலிதாவின் பெயரை வைத்து கொண்டு அராஜகம் செய்தார்கள். வன்முறையை அராஜகத்தை எந்நாளும் ஏற்றுக்கொண்டது கிடையாது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் அதிமுகவின் புனிதத்திற்கு களங்கம் ஏற்படும் என்கிற திமுகவின் கனவு நிறைவேறாது.
சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக்கும் வகையில், இந்த நிகழ்வு அமைந்திருந்தது இந்த வன்முறைகளைத் தடுக்காத திமுக அரசைக் கண்டிக்கிறோம். அராஜகம் யார் செய்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயலலிதா நினைவாலயத்தில் வன்முறை நிகழ்த்திய கயவர்களை அவரது ஆத்மா நிச்சயம் தண்டிக்கும். வருகின்ற 9-ஆம் தேதி வாடிப்பட்டியில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார் ஆர்.பி.உதயகுமார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu