/* */

சோழவந்தான் அருகே தென்கரை மூலநாத சுவாமி திருக்கல்யாணம்

சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி மூல நாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே தென்கரை மூலநாத சுவாமி திருக்கல்யாணம்
X

சோழவந்தான் அருகே தென்கரை மூலநாதர்  சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண விழா.

சோழவந்தான் அருகே தென்கரை அய்லாண்டேஸ்வரி அம்மன் சமேதமூலநாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு இங்குள்ள திருமண மண்டபத்தில் பஞ்சமூர்த்தி அலங்காரத்துடன் விழா தொடங்கியது. இவ்விழாவில் கோவில் அர்ச்சகர் செந்தில்குமரேசன், கண்ணன் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாக வேள்வி நடத்தினர்.

இதைத் தொடர்ந்து பெண்கள் கல்யாண சீர்வரிசை எடுத்து வந்தனர். முகேஷ்குமார் மாப்பிள்ளை வீட்டாராக விஷ்வத்சேனன் பெண் வீட்டாராக திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். கோவில் அர்ச்சகர் செந்தில்குமரேசன் தீபாராதனை மற்றும் மகா தீபாரதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

இதை தொடர்ந்து திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. செயல் அலுவலர் கார்த்திகைசெல்வி, கோவில் பணியாளர்கள் மணி, நித்தியா, ஜனார்த்தனன் உள்பட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மாலை திருமண கோலத்தில் யானை வாகனத்தில் சுனாமியும், காமதேனு அம்பாளும் வீதி உலாவும், நாளை காலை சப்பரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி புறப்படும் நடைபெறும். நாளை மறுநாள் சித்ராபௌர்ணமி அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Updated On: 21 April 2024 12:01 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. வீடியோ
    கூப்புடுறவன் நண்பனா இருந்தா பாகிஸ்தான் Border-ஆ இருந்தாலும் வரணும்...
  3. வீடியோ
    Viduthalai-க்கு முன்-பின் Vetrimaaran தான் காரணம் !#actorsoori #soori...
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் திருநாள்: தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியும், நிறைவும் கொணரும்...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 217 கன அடியாக சரிவு
  6. லைஃப்ஸ்டைல்
    உயிர் நண்பனின் பிறந்தநாளுக்கு, உயிரூட்டும் தமிழ் வாழ்த்துகள்!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எண்ணிக்கை மைய பணிகள் தீவிரம்
  8. காஞ்சிபுரம்
    கருட சேவை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்.
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள இடம் மீட்பு