பண்ணைகுடி செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

பண்ணைகுடி செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்
X

பண்ணைகுடி செல்வ விநாயகர் ஆலய கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 

பண்ணைகுடி செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி கிராமத்தில் செல்வவிநாயகர், சுப்ரமணிய ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, மதுரை கல்யாண சுந்தர சிவாச்சாரியார் தலைமையில், கோயில் முன்பாக யாகபூஜைகள், கடஸ்தாபனம், பூர்ணாஹூதி, நாடி சந்தானம், கலசபூஜைகள் நடைபெற்றன.


கடங்கள் புறப்பட்டு, கோயிலை வலம் வந்து, கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதணை, பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் போலீஸாரும் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!