சோழவந்தான் அருகே ஆலய விழா: பால்குடம் எடுத்த பக்தர்கள்

சோழவந்தான் அருகே ஆலய விழா:  பால்குடம் எடுத்த பக்தர்கள்
X

சோழவந்தான் அருகே பால்குடம் எடுக்கும் பக்தர்கள்.

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் பாம்பலம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் பாம்பலம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா அக்னி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் பாம்பலம்மன் கோவில் 58வது முளைப்பாரி திருவிழா 10 நாட்கள் நடந்தது. இதையொட்டி கடந்த வாரம் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் முத்து பரப்புதல் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியை பாஜக விவசாயஅணி மாநிலதுணை தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் ஆகியோர் தலைமையில் முளைப்பாரிக்கு முத்து பரப்பினார்கள். அன்று மாலை உலக நன்மைக்காக பெண்கள் குத்து விளக்கு பூஜை நடத்தினர்.தினசரி அன்னதானம் வழங்கப்பட்டது.

8ம் நாள் அம்மனுக்கு பூ அலங்காரம் மற்றும் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அன்று மாலை பூசாரி வீரசேகர் சக்தி கரகம் எடுத்து வந்தார். 9வது நாள் காலை பால்குடம், அக்னிசட்டி பக்தர்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அன்று மாலை அம்மன் சிலை ஊர்வலத்துடன் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

10ம் நாள் காலையில் முளைப்பாரி கரைத்தல், மாலையில் தெய்வீக வேடங்கள் அணிந்து வண்டி வேஷம் நடந்தது.தினசரி கலை நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ். ஆறுமுகம், கணேசன்,ஒன்றிய கவுன்சிலர் ரேகாவீரபாண்டி, நிர்வாகிகள் செந்தில்மயில், ஆனந்தகுமார், கண்ணன், ராஜபாண்டி, கார்த்திக்ரவி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா கமிட்டினர்,கிராம பொதுமக்கள், பாம்பலம்மன் கோயில் நண்பர்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணி செய்திருந்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!