/* */

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம்

ஆரோக்கியமான வாழ்விற்கு சிறுதானிய உணவு மிகவும் அவசியம் என்பதை உணரவேண்டும்

HIGHLIGHTS

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம்
X

திருவேடகம்.விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம், திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அக தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக, காலை 10. மணி முதல் 12. மணிவரை ‘ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முதாம் ’ நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி, மதுரை தனிச்சியத்தில் உள்ள வெற்றி சித்தா மருத்துவமனையுடன் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் அகத்தர உறுதி மையத்தின் (IQAC) ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வெற்றி சித்தா மருத்துவமனையின் சித்த மருத்துவர் கதிர்வேல், ஆரோக்கியமான உணவும் நலமான வாழ்வும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், ஆரோக்கியமான வாழ்விற்கு சிறுதானிய உணவின் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் சஞ்சீவி முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக, பொருளியல் உதவிப்பேராசிரியர் முனைவர் அருள்மாறன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை, வரலாற்று துறை உதவிப்பேராசிரியர் குமரேசன் தொகுத்து வழங்கினார்.

Updated On: 16 April 2023 3:00 PM GMT

Related News