சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
X
சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது

சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டுகளிலும் நாள்தோறும், பேரூராட்சி சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ,பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். பணியாளர்களுக்கு உபகரணங்களை பேரூராட்சித்தலைவர் ஜெயராமன் வழங்கினார் .

இந்த நிகழ்ச்சியில், துணைத் தலைவர் லதா கண்ணன், பனிநியமண குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் முத்துச்செல்வி குருசாமி , வழக்கறிஞர் சத்யபிரகாஷ், செந்தில்வேல் ,சிவா. மற்றும் பணியாளர்கள் சோனை. துப்புரவு மேற்பார்வையாளர் வினோத்,பூவலிங்கம் மற்றும் திமுகவைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!