மதுரை மாவட்டத்தில் கோடை மழை

மதுரை மாவட்டத்தில் கோடை மழை
X

சோழவந்தானில் பெய்த கோடை மழை

மதுரை சோழவந்தான் பகுதிகளில் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

மதுரை மாவட்டம்.சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பகுதியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இதமான மழை பெய்தது

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் மிதமான மழை பெய்தது

அடுத்த சில தினங்களில் மதுரை மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான சித்திரைத் திருவிழா தொடங்கும் நிலையில் இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறையும் என பொதுமக்கள் கூறினர்

மேலும் கோடைகால விவசாய பயிரான.மா வெள்ளரி போன்றவற்றின் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!