அலங்காநல்லூர் காவல் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் போராட்டம்

அலங்காநல்லூர் காவல் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் போராட்டம்
X

அலங்காநல்லூர் காவல் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்.

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் சி.பி.எம். கட்சியினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி சி.பி.எம். கட்சியினர் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளித்தாலும், சாதாரண பொதுமக்கள் ஏதேனும் புகார் அளித்தாலும், அந்த புகார் குறித்து மனு ரசீது எதுவும் அளிப்பதில்லை, புகார் குறித்து எந்த விசாரணையும் செய்வதில்லை தொடர்ந்து கட்சியினர் மற்றும் பொதுமக்களே அலைக்கழிக்கும் போக்கை கண்டித்து , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

சார்பில் அலங்காநல்லூர் காவல் நிலையம் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், மனு கொடுக்க வந்தால் தங்களை ஒரு எதிரி போல் பார்ப்பதாகவும் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மறுப்பதாகவும், இந்த நிலை நீடித்தால் அலங்காநல்லூர் காவல் நிலைய காவலர்களை கண்டித்து, மாவட்ட அளவில் போராட்டம் நடத்த போவதாகவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம் காவல் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அலங்காநல்லூர் காவல் நிலையம் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தால், அப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
ai marketing future