வாடிப்பட்டியில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு..!

வாடிப்பட்டியில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு..!
X

தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.

வாடிப்பட்டியில்,அரசுபொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில் அதிகமதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்புவிழா நடந்தது.

வாடிப்பட்டியில்,அரசுபொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில் அதிகமதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்புவிழா நடந்தது.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், திருவள்ளுவர் இலக்கிய மன்றம் மற்றும் கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பாக, கண்ணதாசன் 97-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அரசு பொதுத்தேர்வுகளில், பத்து, பதினொன்று வகுப்புகளில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

இந்த விழாவிற்கு, திருவள்ளுவர் இலக்கிய மன்ற செயலாளர் முனைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் தங்கராஜ், வழக்கறிஞர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித்தலைமை ஆசிரியர் தமிழாசிரியர் விஜய ரெங்கன் வரவேற்றார். கண்ணதாசன் இலக்கிய பேரவைத்தலைவர் கவிஞர் பொன்.பனகல் பொன்னையா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.

இந்த விழாவில், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, திருவள்ளுவர் இலக்கிய மன்றத் தலைவர் தனபாலன், தலைமை ஆசிரியர் திலகவதி ஆகியோர் நூல்களை பரிசுகளாக வழங்கினர். இதில், மன்ற நிர்வாகிகள் கச்சைகட்டி பாபு, ஆகாஸ் மகாலிங்கம், கனினிஆசிரியர் கார்த்திக், உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் உள்படபலர் கலந்து கொண்டனர். முடிவில், உதவி தலைமை ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!