சோழவந்தான் பகுதியில் அரசு பேருந்துகளில் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்

சோழவந்தான் பகுதியில் அரசு பேருந்துகளில் படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள்
X

சோழவந்தான் பகுதியில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவ மாணவிகள்:

சோழவந்தான் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் பயணிக்கும் அவல நிலை உள்ளது

சோழவந்தான் பகுதியில் பேருந்து படிக்கட்டில் பள்ளி மாணவ மாணவிகள் பயணம் செய்யும் சூழ்நிலையை விபத்து ஏற்படும் முன் தடுத்திட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் அவல நிலை உள்ளது.

பள்ளி விடும் நேரங்களிலும் துவங்கும் காலை நேரங்களிலும் அதிகப்படியான கூட்டம் பேருந்து முழுவதும் நிரம்பி வழிவதால் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த மனச்சுமையில் உள்ளனர். மேலும், படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதற்கு பள்ளி மாணவர்களிடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, சோழவந்தான் பகுதியில் காவல்துறை போக்குவரத்து துறை பள்ளி ஆசிரியர்கள் கலந்து ஆலோசித்து அதிகப்படியான பேருந்துகள் விட வேண்டும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story