மதுரை அருகே குளத்தில் மூழ்கி மாணவர் இறப்பு
பள்ளி மாணவர் மூழ்கிய கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம் கிராமத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், பரவை ஊர்மச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன், அனீஸ் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார் .பள்ளி விடுமுறை விட்டதை தொடர்ந்து, சமயநல்லூர் அருகே வைரவநத்தம் கிராமத்தில் உள்ள கிணற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். காலை பத்து முப்பது மணி அளவில் குளிக்க சென்ற அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கிணற்றில் இறங்கி தேடியும் மாணவன் உடலை மீட்க முடியாததால், அலங்காநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து 3 மணி நேரமாக தேடி அனிஸ் உடலை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவன் நீருக்குள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து , அவர் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுதல் கூறியுள்ளார். ஆனால், தாமதமாக வந்ததாகக்கூறி அங்குள்ள பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாம்.
இதனால், தனது மகனைப் பறிகொடுத்த ஆனந்தன் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். ஏற்கெனவே தங்கள் ஆசை மகன் இழந்த துக்கத்தில் இருக்கும்போது, சட்டமன்ற உறுப்பினரின் தகாத வார்த்தைகள் அவர்களை மேலும் வேதனையடைய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu