சோழவந்தானில் மாநில அளவிலான கபாடி போட்டி

சோழவந்தானில் மாநில அளவிலான கபாடி போட்டி
X

சோழவந்தானில் 72 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

சோழவந்தானில் மாநில அளவிலான கபாடி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டது

சோழவந்தானில் 72 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் , சோழவந்தானில் சங்கங் கோட்டை கிராமத்தார்கள் இளைஞர்கள் மற்றும் எஸ் ஆர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாநில அளவிலான கபடி போட்டி ,எம்விஎம் மருது திரையரங்கம் அருகில் உள்ள மந்தைக் களத்தில் நடைபெற்றது.

போட்டியை, வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், சங்கங்கோட்டை கிராம தலைவரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவா, சோழவந்தான் அரிமா சங்கத் தலைவரும் கலைவாணி பள்ளி தாளாளருமான மருது பாண்டியன், சங்கங்கோட்டை கிராம செயலாளர் ராமகிருஷ்ணன், தேமுதிக பிரமுகர் தங்கராஜ், டிஜே ஆறுமுகம், காளிமுத்து, சங்கங்கோட்டை லிங்கம், அசோக் சந்திரன், வணங்காமுடி, மாரி மற்றும் சங்ககோட்டை கிராமத்தார்கள் இளைஞர்கள் எஸ் ஆர் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர்.

இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் கலந்து கொண்டனர் இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்ற குருவித்துறை அணியினருக்கு25 ஆயிரம் மற்றும் கோப்பையை எம் வி.எம் குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் டாக்டர் எம் மருதுபாண்டியன், மணி முத்தையா வள்ளி மயில் குடும்பத்தினரும்,

இரண்டாவது பரிசு பெற்ற மதுரை மேலமடை அணியினருக்கு 20,000 மற்றும் கோப்பையை வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் குடும்பத்தினரும், மூன்றாவது பரிசு பெற்ற திண்டுக்கல் மாவட்டம், மட்டப்பாறை அணியினருக்கு 15,000 கோப்பையை வாடிப்பட்டி நகர அரிமா சங்க தலைவரும், திவ்யா ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் நிறுவனருமான ராமச்சந்திரனும், நான்காவது பரிசு பெற்ற மேட்டு நீரேத்தான் அணியினருக்கு 10,000 மற்றும் கோப்பையை டெல்லி கணேஷும் வழங்கினர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அமைச்சூர் கபாடி கழகத் தலைவர் சோலைராஜா கலந்து கொண்டார்.

Tags

Next Story
ai healthcare products