சோழவந்தானில் மாநில அளவிலான கபடி போட்டி
சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தில் உள்ள அரசன் சண்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாநில கபடி போட்டி
சோழவந்தான் ஆலங் கொட்டாரத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 74 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஆலங்கொட்டாரம் கிராமத்தில் உள்ள அரசன் சன்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி வி சி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்றது. மாநில அளவிலான நடைபெற்ற போட்டியில் தமிழக முழுவதும் இருந்து 74 அணிகள் பங்கேற்றன.முதல் பரிசினை மேட்டுநீரேத்தான் அணியும், இரண்டாவது பரிசினை பாறைப்பட்டி அணியும் ,மூன்றாவது பரிசினை மீனாட்சிபட்டி, நான்காவது பரிசினைண செக்கானூரணி அணியும் பெற்றனர். தொடர்ந்து எட்டு அணிகளுக்கு கோப்பையும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வி.சி. ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் மற்றும் ஆலங்கொட்டாரம் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
கபடி விளையாட்டு உருவானது எப்படி..
இங்கு தான்..தமிழ் மண்ணில், தமிழர்களால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது. இப்போது உலக நாடுகளில் பரவலாக விளையாடப்படுகின்றது. கை-பிடி என்ற வார்த்தையே கபடியாக மாறியுள்ளதாக கருதப்படுகின்றது. கபடி, கபாடி,சடுகுடு, பலிஞ்சடுகுடு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
சுமார் 4000 வருடங்களுக்கு முன்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க செய்யப்படும் பயிற்சிதான் இந்த கபடி விளையாட்டு. ரெய்டர் காளையாக கருதப்பட்டு அவரை எதிரணி வீரர்கள் அடக்குவர். பின்னர் இந்தப் பயிற்சி, வீர விளையாட்டாக உருவெடுத்து இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகள் முழுவதும் பரவியது. புத்தர் உட்பட பல இளவரசர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க சுயம்வரங்களில் இந்த விளையாட்டை விளையாடியுள்ளனர்.
1921ல் கபடி விளையாட்டிற்கான கமிட்டி மகாராஷ்டிராவில் உருவாக்கப்பட்டது. 1950 ல் அனைத்திந்திய கபடி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. பின்பு 1972 ல் இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பாக மாற்றப்பட்டது.
1980 ல் முதன் முதலாக ஆசிய கபடி போட்டி நடத்தப்பட்டு இந்தியா சாம்பியன் ஆனது. முதல் கபடி உலக கோப்பை 2004 ல் நடைபெற்றது. இந்தியா முதல் உலக கோப்பையை கைப்பற்றியது. இதுவரை இந்தியா 8 முறை உலக சாம்பியன் ஆகியுள்ளது.
கபடியில் இந்திய பெண்களும் சளைத்தவர்களல்ல. 2005 ல் மகளிருக்கான ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்று அசத்தினர். 2012 ல் நடைபெற்ற மகளிருக்கான முதல் கபடி உலக கோப்பையை வென்று அசத்தினர். இதுவரை மூன்று முறை உலக சாம்பியன் வென்றுள்ளனர் நம் இந்திய மகளிர். அனைத்து வகை கபடி போட்டிகளிலும் இந்தியர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். உடலும் மனதும் வலுப்படுத்துவதே இந்த விளையாட்டின் அறிவியல். இதை உலகத்திற்கு அளித்தவர் நம்தமிழர்கள் வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளின் தேசிய விளையாட்டாக கபடி திகழ்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu