திருவேங்கடம் விவேகானந்தா கல்லூரியில் விளையாட்டு விழா

திருவேங்கடம் விவேகானந்தா கல்லூரியில் விளையாட்டு விழா
X

மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் 51வது ஆண்டு விளையாட்டு விழாவும் விவேகானந்த பள்ளியின் 43வது ஆண்டு விளையாட்டு விழாவும் இன்று (07-4-2022) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இறை வணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துத்துடன் விழா இனிதே துவங்கப்பட்டது. கல்லூரி மாணவர் குழுவின் பொதுச் செயலாளர் வணிகவியல் துறை இறுதியாண்டு மாணவர் செல்வன் யுவராஜ் வரவேற்புரை ஆற்றினார். விவேகானந்த கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குனர் முனைவர் சீனிமுருகன் கல்லூரி விளையாட்டுத்துறையின் ஆண்டறிக்கையை வாசித்தார். விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் பிரபாகரன் பள்ளியின் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையை வாசித்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி நியமனத, விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, விவேகானந்த மேல்நிலைப் பள்ளியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி பரமானந்த, துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி, அகத்தர மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு, முதன்மையர் முனைவர் சஞ்சீவி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதவன் முன்னிலை வகித்தனர். கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மனந்த ஆசியுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் முனைவர் பொன்முத்துராமலிங்கம் விளையாட்டு தின உரை ஆற்றினார். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். விவேகானந்த மேல்நிலைப்பள்ளி மாணவர் குழுவின் பொதுச் செயலாளர் செல்வன் முகேஷ் சர்மா நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் முருகன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story