விவேகானந்தா கல்லூரியில் மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்

விவேகானந்தா கல்லூரியில் மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்
X

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற  மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்

விளையாட்டு போட்டிகளிலிருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மண்டலம்- பி -தகுதிக்கு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், சுவாமி சித்பவானந்தர் உள்விளையாட்டு அரங்கில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மண்டலம்- பி. மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப்பந்து, மேஜைபந்து மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி மற்றும் முதன்மையர் முனைவர் சஞ்சீவி முன்னிலை வகித்தனர்.

இதில், மதுரை மதுரை கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, செந்தாமரை கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி, தியாகராஜா ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மற்றும் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேஜைபந்து அணிக்காக 16 மாணவர்களும், இறகுப்பந்து அணிக்காக 22 மாணவர்களும், சதுரங்கப் போட்டி 8 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதில், அணி மேலாளர்களாக மதுரைக் கல்லூரியின் டாக்டர் கதிர்வேல் பாண்டியன், சௌராஷ்டிரா கல்லூரியின் டாக்டர் ரவீந்திரன், செந்தாமரை கல்லூரியின் டாக்டர் கவி, சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் டாக்டர் யுவராஜ், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் டாக்டர் ராகவன், தியாகராஜா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியின் டாக்டர் சிவா விக்னேஷ் மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் ராமர் ஆகியோர் கலந்து கொண்டனர். விவேகானந்த கல்லூரியின் உடற்பயிற்சி பேராசிரியர் முனைவர் சீனிமுருகன் விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

நடைபெற்ற விளையாட்டு போட்டிகளிலிருந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மண்டலம்- பி -க்கு தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்நடைபெற்ற விளையாட்டு போட்டிகளிலிருந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மண்டலம்- பி -க்கு தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags

Next Story