வாடிப்பட்டியில் ஆன்மீக பயிற்சி வகுப்பு

வாடிப்பட்டியில் ஆன்மீக பயிற்சி வகுப்பு
X

வாடிப்பட்டியில், ஆன்மீக பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

வாடிப்பட்டியில் ஆன்மீக பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நீரேத் தான் நவநீத பெருமாள் கோவில், திருச்சி ஸ்ரீமான் டிரஸ்ட் மற்றும் ராமச்சந்திரா நாட்டியாலயா பள்ளி இணைந்து நடத்திய கோடைகால ஆன்மீக பயிற்சி வகுப்பின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் பொன். பலகல் பொன்னையா தலைமை தாங்கி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். பள்ளி நிர்வாகி கோபிகுமார் வரவேற்றார்.

ஸ்ரீமான் டிரஸ்ட் தெய்வீக பண்பாட்டு பயிற்சியாளர் பட்டர் நவநீத கண்ணன், திருவிளக்கு, ஏகாதசி விரதம், துளசி மகிமை, காவேரி ஆறு சிறப்பு, கோமாதா மகாத்மியம் என்ற தலைப்புகளில் புராண கதைகள், ஆன்மீக வழிபாட்டு சிறப்புகள் பற்றியும், பயிற்சியளித்து, பஜன், பாராயணம், வினாடி வினா, ஓவிய போட்டி, ஒப்புவித்தல் போட்டி, கோடிட்ட இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தினார். இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில், பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சி பள்ளி ஆசிரியர் முத்துமாலா நன்றி கூறினார்.

Next Story
ai solutions for small business