மதுரை மாநகர கோயில்களில் ஆடி வெள்ளிக் கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள்

மதுரை மாநகர கோயில்களில் ஆடி வெள்ளிக் கிழமையையொட்டி சிறப்பு  வழிபாடுகள்
X

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி மதுரை மேலமடை செளபாக்கிய ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில்   வராஹியம்மன்.

மதுரை மாநகர கோயில்களில் ஆடி வெள்ளிக் கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில், ஆடிவெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகளும் அலங்காரம், அன்னதானங்கள் நடைபெற்றது. இதே போல, மதுரை மேலமடை தாசில் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், துர்க்கை அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக வழிபாடும் அர்ச்சனைகளும், அர்ச்சகர் குப்பு பட்டர் செய்திருந்தார்.

இதே போல மதுரை அண்ணா நகர் யானை குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, முத்து மாரி அம்மனுக்கும் மற்றும் துர்க்கை அம்மனுக்கும், பட்டர் மணி கண்டன் சிறப்பு அபிஷே வழிபாடுகளும், அர்ச்சனைகளும் செய்தனர். பக்தர்களுக்கு கூழ்பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல, மதுரை மேலமடை தாசில்தார் நகர், சௌபாக்கியம் ஆலயத்தில் உள்ள வராகி மற்றும் துர்க்கை அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக வழிபாடுகளும் அர்ச்சனைகளும் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நெய் விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். கோயில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மிக மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil