வாடிப்பட்டி பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்!

வாடிப்பட்டி பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்!
X

மதுரை அருகே, வாடிப்பட்டி பேரூராட்சி நடந்த மக்கள் முதல்வர் சிறப்பு முகாம்.

வாடிப்பட்டி பேரூராட்சியில், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.

வாடிப்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்புமுகாம்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் கிருஷ்ணா

மஹாலில் நடந்தது. இந்த முகாமிற்கு, வெங்கடேசன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி தொடக்கிவைத்தார். பேரூராட்சிகளின் உதவிஇயக்குநர் எஸ். சேதுராமன், தாசில்தார் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் மு.பால்பாண்டியன் வரவேற்றார்.

இந்த முகாமில், ஒன்றியக் கவுன்சிலர் பசும்பொன்மாறன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பிறதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த முகாமில் பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்கள் அந்தந்த துறைவாரியாக, பெறப்பட்டது. முடிவில், செயல்அலுவலர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

மதுரை மாவட்டத்தில் ,பேரூராட்சி ,நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் ,மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது .

முகாம்களில் ,மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர் நடவடிக்கையாக அனுப்பப்பட்டு வருகிறது. முகாமுக்கான, ஏற்பாடுகளை ,மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!