சோழவந்தானில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி
மதுரை மாவட்டம், சோழவந்தானில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான நடைபெற்ற களப்பயிற்சி
மதுரை மாவட்டம், சோழவந்தானில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான களப்பயிற்சி நடைபெற்றது.
சோழவந்தானில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் திடக்கழிவு மேலாண்மை குறித்த கள பயிற்சியில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயிற்சிக்காக, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளை சேர்ந்த செயல் அலுவலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
சோழவந்தான் பேரூராட்சியில், உள்ள 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என, பிரித்து திடக்கழிவு செய்யும் முறையையும், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது குறித்த பயிற்சியையும் மேற்கொண்டனர். மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எஸ். சேதுராமன், செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்,சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திடக்கழிவு மேலாண்மை திட் டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 11 மாநகராட்சிகளிலும் (சென்னை நீங்கலாக), 124 நகராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் பற்றி பொது மக்களிடம் வீடு, வீடாகச் சென்று எடுத்து கூறப்படுகிறது
உள்ளாட்சி அமைப்புகளில் தினசரி சேகரமாகும் குப்பைகளை கையாளுவதில் பெரும் சிரமம் உள்ளது. இந்த குப்பைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக் கப்படுகிறது. அதனால் உள்ளாட்சி அமைப்புகள் ஒன்றாக இணைந்து குப்பைகளில் இருந்து மின்சாரம், எரு, மண்புழு உரம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
2016-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டப்படி உணவகங்கள், விடுதிகள், வணிக நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் மற்றும் குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும் சாலையில் குப்பை கொட்டுபவர்கள், தரம் பிரித்து வழங்காதவர்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தூய்மை காவ லர்கள் கண்காணித்து, அபராதம் விதிக்கப்படுகிறது.
தினசரி சேரும் குப்பைகளில், மக்கும் குப்பைகளை பச்சை நிற கூடையிலும், மக்காத குப்பைகளை நீல நிற கூடையிலும் உள்ளாட்சி பணியாளர்களிடம் வழங்க வேண் டும். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்தும், 2016 திடக் கழிவு மேலாண்மை சட்டம் குறித்தும், திறந்த வெளியில் மலம் கழிக்காதிருத்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்தல் உள் ளிட்ட சுகாதாரம் குறித்து அனைத்து விளக்கங்களையும் இவர்கள் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் விளக்கமளிக்கப்படுகிறது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu