சோழவந்தான் அருகே சோசலிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சோழவந்தான் அருகே சோசலிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

சோழவந்தான் அருகே காடுபட்டியில்,புரட்சிகர சோசலிஸ்டு கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்.

சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியினரின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசுக்கு எதிராக விலைவாசி வியர்வை கண்டித்தும் , இந்திய தேசிய காங்கிரஸ் ராகுல் காந்தி கைதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை முறையாக பயன்படுத்த கோரியும்,கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஒன்றிய செயலாளர் ராமன் தலைமை வகித்தார். மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேது சிறப்புரையாற்றினார். முருகன் நன்றி உரையாற்றினார். ஜெயக்குமார், பாண்டி, கார்த்திகேயன், புது மணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புரட்சிகர சோஷலிசக் கட்சி (Revolutionary socialist party) இந்தியாவிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். இது 1940ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. பஞ்சாக்‌ஷன். இக்கட்சியின் இளையோர் அமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணி (Revolutionary Youth Front) ஆகும். 2004 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி 1,717,228 வாக்குகளைப் (0.4%) பெற்றது. மக்களவையில் 3 இடங்களையும் வென்றது. இக்கட்சி இந்திய இடது முன்னணியில் அங்கம் வகிக்கிறது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை