மதுரை மாவட்ட கோயில்களில் விடிய, விடிய சிவராத்தி ரி சிறப்பு பூஜைகள்!

மதுரை மாவட்ட கோயில்களில் விடிய, விடிய சிவராத்தி ரி சிறப்பு பூஜைகள்!
X

 சோழவந்தான் சிவன் கோவிலில், ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் பவனி.

சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிவ பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜைகள் நடந்தது.

சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோவிலில் சிவ பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும் அம்பாளும் ரிஷபவாகனத்தில் கோவிலை மூன்று முறை சுற்றி வந்தனர்.

பக்தர்கள் பின் தொடர்ந்து சிவ சிவ என்று பக்தி பரவசத்தில் கோஷமிட்டு வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தது. நிரந்தரமாக பிரதோஷ விழாவை நடத்தி வரும் எம்விஎம் குழுமதலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

இதேபோல் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவிலிலும் திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் மேலக்கால் ஈஸ்வரன் கோவிலிலும்சிவ பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவில்களில் நடந்த சிவ பிரதோஷ விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டத்தில், பல திருக்கோயில்களில், மகா சிவராத்திரி முன்னிட்டு, கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை அண்ணா நகர் , தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம் , வர சித்தி விநாயகர் ஆலயம், மேலமடை சௌபாக்ய விநாயகர், சர்வேஸ்வரர் ஆலயம், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், பழைய சொக்கநாதர் கோவில், மீனாட்சி சுந்தரர் கோவில், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், துவரிமான் மீனாட்சி சுந்தரேசன் கோவில், சோழவந்தான் பிரளயநாத சுவாமி சிவன் ஆலயம், தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் சிவராத்திரி முன்னிட்டு, சிறப்பு பூஜைக்கு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்