மேலக்கால் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

மேலக்கால் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் கூச்சல் குழப்பம்:
மேலக்கால் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற த்தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்ட சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சியில் , ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் ஒரு அணியாகவும், வார்டு உறுப்பினர்கள் ஒரு அணியாகவும் உள்ளனர்.இதில், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் சார்பில், வார்டு கவுன்சிலர்கள் தங்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், வார்டு கவுன்சிலர்கள் தரப்பில் கூறும்போது: ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் எந்த ஒரு நிகழ்வுக்கும்.தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிப்பதில்லை என்றும்,ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சுமத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி மன்றக் கூட்டம் நடைபெறும் அனைத்து நாட்களும் கூச்சல் குழப்பமாக இருப்பதால், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.மேலும், ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உள்ள அடையாள அட்டையை வார்டு உறுப்பினர்கள் தங்களிடம் இருக்க வேண்டும் என்றும், தலைவர் மற்றும் துணைத்தலைவர் தங்களிடம் இருக்க வேண்டும் என்றும் கூறியதால், ஒரே கூச்சல் குழப்பமாக கூட்டம் நடைபெற்றது.
இது சம்பந்தமாக, பொதுமக்கள் கூறும்போது, 100 நாள் வேலை சம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாகவும்100 நாள் வேலை அட்டையை அவரவரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு, வாடிப்பட்டி யூனியன் அதிகாரி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu