/* */

சோழவந்தான் சி.எஸ்.ஐ. பள்ளி ஆண்டு விழா!

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழவந்தான் சி.எஸ்.ஐ. பள்ளி ஆண்டு விழா!
X

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளி ஆண்டு விழா.

சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

சோழவந்தான், மார்ச்.

சோழவந்தான் சி.எஸ். ஐ.தொடக்கப்பள்ளி நூற்றாண்டை கடந்த பள்ளிகளில் ஒன்றாகும் இப்பள்ளியின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் விழாவிற்கு தலைமை ஏற்று இறை வேண்டுதல் நடத்தினார் பள்ளி முன்னாள் மாணவர் பொறியாளர் காசி, பள்ளி கௌர ஆலோசகர், வர்த்தகர்கள் சங்கத் செயலாளர் ஆதி. பெருமாள், எல்ஐசி முத்துராமன், அலங்காநல்லூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.உதவி ஆசிரியை பிரேமா அன்னபுஷ்பம் வரவேற்றார். இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் பிராங்கிளின் நினைவாக பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்கப் பதக்கத்தை பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வழங்கினார்.

ஏ.என். ஆதிமூலம்பிள்ளை சரஸ்வதிஅம்மாள் நினைவாக பள்ளியின் இரண்டு மற்றும் மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கத்தை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கவுன்சிலர் சத்திய பிரகாஷ் வழங்கினார். வட்டாரகல்வி அலுவலர்கள் ஷாஜகான் அகிலத்துஇளவரசி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி ஆகியோர் பரிசு வழங்கினார்கள்.

ராயபுரம் ஆர்.சி பள்ளி தலைமையாசிரியை பணிமாதா, சோழவந்தான் ஆர்.சி பள்ளி தலைமையாசிரியை சாந்திஅமலாஜோஸ்பின், பகல் நேரபாதுகாப்பு மையஆசிரியை தேவிகா,உதவி ஆசிரியைகள் பிரேம்குமாரி, கிருஷ்டி ஜெயஸ்டார்,திவ்யா ஆகியோர் பேசினார்கள். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. உதவி ஆசிரியை வனிதா சாந்தகுமாரி நன்றி கூறினார்.

Updated On: 18 March 2024 12:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?