சோழவந்தான் பேட்டை, சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

சோழவந்தான் பேட்டை, சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
X

மதுரை சோழவந்தான் பேட்டை சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகவிழா 

சோழவந்தான் பேட்டை, சந்தன மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சோழவந்தான் :

மதுரை,சோழவந்தான் பேட்டை கிராமத்தில் வைகை கிழக்குக்கரையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் அருள்பாலித்துவரும் சந்தன

மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தது. இரண்டு நாட்கள் மூன்று கால யாக வேள்விகள் நடந்தது.இதைத் தொடர்ந்து, நேற்று காலை நான்காம் கால யாக கேள்விகள் நடந்து வரதராஜ் பண்டிட் தலைமையில் விழா குழுவினர் புனித நீர் குடங்களை மேளதாளமுடன் கோவிலில் வளம் வந்தனர்.

கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால்,தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று மகா அபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வெங்கடேசன் எம். எல். ஏ. ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருது பாண்டியன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், துணைச் செயலாளர் ஸ்டாலின் ,வார்டு கவுன்சிலர் முத்துச்செல்வி, சதீஷ்குமார், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, வார்டு கவுன்சிலர்கள் கௌதம ராஜா, குருசாமி, செல்வராணி, கொத்தாலம் செந்தில், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

கிராம பொதுமக்கள் கும்பாபிஷே விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். சோழவந்தான் 2வது வார்டு சந்தன மாரியம்மன் கோவில் தெரு கிராமம் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

Tags

Next Story
why is ai important to the future