சோழவந்தானில், சிதலமடைந்த கால்நடை மருந்தகம்: சீரமைக்கப்படுமா? - பொதுமக்கள் கோரிக்கை..!

சோழவந்தானில் ,சேதமடைந்த நிலையில் உள்ள கால்நடை மருந்தகம்.
சோழவந்தானில் இடிந்து விழும் நிலையில் கால்நடை மருத்துவமனை கட்டிடம்
சோழவந்தான் கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. இந்த கால்நடை ஆஸ்பத்திரிக்கு சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பசுமாடு காளை மாடு, ஆடுகள், பூனைகள் நாய்கள், கோழிகள் உட்பட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய தொற்று நோய் மற்றும் மர்ம நோய்க்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான தடுப்பூசியும் இங்கு போடப்படுகிறது. இந்த கால்நடை ஆஸ்பத்திரியின் கட்டிட முன்பகுதி உட்பட பல பகுதி மேற்கூரைகள் சிமெண்ட் பெயர்ந்து கீழே விழுந்து கம்பி தெரிகிறது. எந்த நேரம் இந்த மேல் சுவர் இடிந்து விழும் என்ற நிலையில் அபாயகரமாக உள்ளது.
ஒரு வேலை இடிந்து விழுந்தால் இங்கு சிகிச்சைக்கு வரக்கூடிய கால்நடைகளுக்கும் அழைத்து வரக்கூடிய பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டடத்தை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu