சோழவந்தான் பேரூராட்சியில் தடுப்பூசி போட்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

:மதுரை மாவட்டத்தில், பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவது ஊக்குவிக்கும் வகையில் ,தமிழக அரசின் உத்தரவுப்படி, பேரூராட்சிகள் மதுரை மண்டல இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சோழவந்தான் பேரூராட்சி பகுதிகளில், நடைபெற்ற சிறப்பு முகாமில் ,தடுப்பூசி போடும் நபர்களுக்குக் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டவர்களுக்குக் குலுக்கல் முறையில் ஐந்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சோழவந்தான் பேரூராட்சி சார்பில், பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக ,தடுப்பூசி போடும் முகாம்களை, பேரூராட்சிகளின் மதுரை மண்டல இயக்குநர் சேதுராமன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாம்களில், தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார் .

இதில், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் துப்புரவு மேற்பார்வையாளர் திலீபன்சக்கரவர்த்தி மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் பேரூராட்சி

பணியாளர்கள் கலந்து கொண்டனர். நடைபெற்ற தடுப்பூசி முகாமில், சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Tags

Next Story