சோழவந்தான் பகுதி சிவ ஆலயங்களில், சனிப் பிரதோஷ விழா: பக்தர்கள் பரவசம்

சோழவந்தான் பகுதி சிவ ஆலயங்களில், சனிப் பிரதோஷ விழா: பக்தர்கள் பரவசம்
X

மதுரை மாவட்டம் சோழவந்தான் சிவன் ஆலயத்தில்  சனி மஹா பிரதோஷ விழா.

சோழவந்தான் பகுதி சிவ ஆலயங்களில், சனிப் பிரதோஷ விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று பரவசமடைந்தனர்.

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் சனி மகாபிரதோஷ விழா

சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலில்நடைபெற்ற சனி பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்து சுவாமியும் அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் உட்பட சிவபக்தர்கள் ஏராளமானவர்கள் சிவசிவ என்று கூறி சுவாமி அம்பாளுடன் பின் தொடர்ந்து வலம் வந்தனர். சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் எம்விஎம் குழும தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிவ பக்தர்கள் குவிந்தனர்.சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

இதே போல் திருவேடகம் ஏடகநாத சுவாமி கோவில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில் மேலக்கால் ஈஸ்வரன் திருக்கோவில்ஆகிய சிவாலயங்களில் சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!