சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர ஆலயத்தில் சனி மஹா பிரதோஷ விழா

சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர ஆலயத்தில் சனி மஹா பிரதோஷ விழா
X

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத சனி மஹா பிரதோஷ விழா

விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு அபிஷேகங்களும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத சனி மஹாபிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற பிரளயநாத(சிவன்)கோவிலில் சனிபிரதோஷ விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

பாஜக விவசாய அணி மாநில செயலாளர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன்,தக்கார் இளமதி மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பிரதோஷ விழாவில் சிவ பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல்திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சனிபிரதோஷ விழா நடைபெற்றது.

சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர்.பூஜைகள் நடந்தது. மன்னாடிமங்கலம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில்,சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்,விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இப்பகுதி உள்ள சிவாலயங்களில்சனி பிரதோஷ விழா நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!