அலங்காநல்லூர் அருகே சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி தொடர் போராட்டம்
மதுரை மாவட்ட அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
சர்க்கரை ஆலையில் அரவையை துவங்கிட கோரி ஆலை முன்பு 9 வது நாளாக கார்த்திருக்கும் போராட்டம் தொடர்கிறது.
மதுரை மாவட்டம், அலங்கநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த் ஆண்டுக்கான அரவை இன்னும் துவங்கபடாமல் உள்ளது. அரவையை துவங்கிட கோரி கடந்த வாரம் செவ்வாயன்று துவங்கிய காத்திருக்கு போராட்டம் இன்று செவ்வாயன்று 9-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே ,அரவையை துவங்கிட கோரியும், விவசாயிகளிடம் ஆலை கரும்பினை கொள்முதல் செய்திட கோரியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமையில் ஆலையை துவக்கும் வரை காத்திருக்கும் போராட்டம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய போராட்டம் செவ்வாயன்று இன்று 9வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் , கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் என்.ஸ்டாலின்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன், பெரியகருப்பன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் செயலாளர் சொ.பாண்டியன், கரும்பு விவசாயி சங்க நிர்வாகிகள் பி.போஸ், மொக்கமாயன், ராம்ராஜ், அய்யம்பட்டி பன்னிர்செல்வம், அடைக்கன், ஆகியோர் உட்பட விவசாயிகள் 9 வது நாளாக போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சக்கரை கரும்பு விவசாயிகள் ஆலையின் முன்பு 9- வது நாள் காத்திருப்பு போராட்டத்திற்கு பெரிய ஊர்சேரி கிராம மக்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உட்பட சுமார் 200க்கு மேறபட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu