திருவேடகம், விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்

திருவேடகம், விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்
X

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கம் 

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை அகத்தர உத்தரவாத மையம் மற்றும் வரலாற்று துறை இணைந்து நடத்தினர் . வரலாற்றுத் துறை தலைவர் முனைவர் நாகேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார்.

துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார். வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் முனைவர் காளியப்பன் மற்றும் முருகன் சிறப்புரை ஆற்றினார்கள். வரலாற்றுத்துறை பேராசிரியர் குமரேசன் நன்றி உரையாற்றினார்.

மேலும் ,திருவேடகம், விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அந்தந்த துறை ஸ்மார்ட் வகுப்பறைகளில் இருந்து, இந்திய அரசு நடத்திய நிகழ்ச்சியை இணையத்தில் நேரடியாக பார்த்து, இந்திய குடியரசுத் தலைவருடன் அரசியலமைப்பின் முன்னுரையை உறுதிமொழியாக எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!