மதுரை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்
X

மதுரை விமான நிலையம் (பைல் படம்)

மத்திய சுங்க இலாகாவின் வான் நுண்ணறிவு பிரிவினர் விமானத்தில் வந்த 182 பயணிகளிடம் தீவிர சோதனை செய்தனர்

துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமான இருக்கை அடியில் பேஸ்ட் வடிவிலான ரூபாய் 59.27 லட்சம் மதிப்புள்ள 940 கிராம் எடை தங்கம் கைப்பற்றப்பட்டது:

துபாயில் இருந்து புறப்பட்டு பகல் 12.30 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் விமானம் மதுரை வந்தடைந்தது.மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து, மத்திய சுங்க இலாகாவின் வான் நுண்ணறிவு பிரிவினர் விமானத்தில் வந்த 182 பயணிகளிடம் தீவிர சோதனை செய்தனர்.

இதில், பயணிகளிடம் எந்த பொருளும் கைப்பற்றப்படாததையடுத்து விமானத்தில் உள்பகுதியில் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது, பயணிகள் இருக்கையில் அடியில் தங்க பேஸ்ட் மறைத்து இருப்பது தெரிய வந்தது. அதனையடுத்து, மதுரை விமான நிலைய சுங்க இலக்கா வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்து பார்த்த போது, பேஸ்ட் வடிவிலான தங்கம் கைப்பற்றப்பட்டு அதனை உருக்கி பார்த்தில் சுமார் 940 கிராம் எடையுள்ள தங்கம் இருப்பதும், அதன் மதிப்பு ரூபாய் 59.27 லட்சம் எனத் தெரியவந்தது.

விமான இருக்கையில் இருந்து தங்கம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து ,மத்திய சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story
ai based agriculture in india