சோழவந்தானில் சீதா பிராட்டியார் குருப்பூஜைகள்!

சோழவந்தானில் சீதா  பிராட்டியார் குருப்பூஜைகள்!
X

சோழவந்தானில் சீதாப்பிராட்டியார் குருபூஜை.

மதுரை சோழவந்தானில் சீதா பிராட்டியார் குருபூஜை விழா நடைபெற்றது.

சோழவந்தானில் சீதா பிராட்டியார் குருபூஜை விழா:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ஆர். எம். எஸ். காலனியில் ஸ்ரீ சீதா பிராட்டியார் குரு பூஜை விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு, திண்டுக்கல் எம் .வி. முத்தையா அரசு மகளிர் கலை கல்லூரி தமிழ் துறை முனைவர் மீனா லோசினி தசா வதாரங்களில் ராமாவதாரம் என்ற தலைப்பில் ஆன்மீக உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. தொடர்ச்சியாக, தொண்டின் திருவுரு என்ற தலைப்பில் அன்னை ஸ்ரீ சீதாலட்சுமி ஞானாலயம் சித்தர் பீடத்தை சேர்ந்த வேத ராஜா ஆன்மீக உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, அன்னை ஸ்ரீ சீதா பிராட்டிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, ஆர் எம் எஸ் காலனி முழுவதும் அன்னை ஸ்ரீ சீதா பிராட்டியார் பூ சப்பரத்தில் திருவீதி உலா வந்து பொது மக்களுக்கு தரிசனம் தந்தார். அப்போது, தெரு முழுவதும் பொதுமக்கள் திரண்டு வந்து சீதா பிராட்டியை வரவேற்று மகிழ்ந்தனர். தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!