மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிப்பு பயிற்சி

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிப்பு  பயிற்சி
X

விதைப்பந்து தயாரிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்.

மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு விதைப்பந்து தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

புவி வெப்பமயமாதலைத் தடுக்க பசுமைப் போர்வையை ஏற்படுத்தும் வகையில் மரங்களை வளர்க்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அதைத் தொடர்ந்து அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள், பள்ளி மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகளின் கரைகள், சாலை ஓரங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, அதை பாதுகாப்பதில் பல நடைமுறை பிரச்னைகள் உள்ளன. அதை தவிர்க்கும் வகையில், விதைப்பந்துகளை தயாரித்து அதை சாலை ஓரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் வீசும்போது அவை தானாக முளைத்து மரங்களாக வளரும்.

மதுரையில் அய்யர் பங்களா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இயற்கை எனும் அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து தயரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் 5 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து விதைப்பந்துகளை தயாரித்தனர். இயற்கை அமைப்பின் சார்பில் விதைப்பந்து தயரிப்பதற்கான களிமண் மற்றும் வேப்பமர விதைகள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு, விதைப்பந்து செய்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்களும் ஆர்வத்தோடு விதைப்பந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story