மதுரை அருகே போலீஸாரைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்

மதுரை அருகே போலீஸாரைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்
X

மதுரை அருகே சிலைமான் காவல்நிலைய காவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்

காவல்துறையைக் கண்டித்து சிலைமான் காவல்நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை அவதூறாக பேசியதாக சிலைமான் காவலரைக் கண்டித்து காவல் நிலையம் அருகே முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, சிலைமான் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி, குற்றச்செயல்கள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கட்சி நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து குறைகளை எடுத்து கூறினர்.

இது சம்பந்தமாக, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சிலைமான் காவல் ஆய்வாளரை சந்திக்கச் சென்றபோது,காவல் நிலையத்தில் இருந்த காவலர் மீனாட்சிசுந்தரம் என்பவர், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை வரம்புமீறி தரைகுறைவாக பேசியதாக கூறப்படுகிறது. ‌ இதைக்கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த தெற்கு, வடக்கு மாவட்டத்தின் சார்பாக ஜனநாயக முறையில், மதுரை சிலைமான் காவல் நிலையத்திற்கு முன்பாக கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர். காவல் நிலைத்தில் காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டம் செய்ததால், இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!