வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா..!

வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா..!

முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்துவைத்த பள்ளிக்கட்டிடம்.

வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.85.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.85.44 லட்சம் மதிப்பீட் டில் கூடுதல் பள்ளி கட்டிடம்:

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தில் ரூ 85.44 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கட்டிடத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறையில்,பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, ஒன்றிய செயலாளர் பால. ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்

தலைமையாசிரியர் இனிக்கோ எட்வர்ட் ராஜா இனிப்பு வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் விஜய்ரங்கன் வரவேற்றார். இதில், கவுன்சிலர் ஜெயகாந்தன், பள்ளி வளர்ச்சி குழுத்தலைவர் வாசுகி, உறுப்பினர்கள் சசிகுமார், ராஜலட்சுமி,அங்காள ஈஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் உறுப்பினர்கள் ஜெயராஜ், சாந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story