பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு முகாம்

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு முகாம்
X

கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்.

மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின் பேரில், வட்டார கல்வி அலுவலர்கள் ஜான்சி, ஜெயசித்ரா ஆகியோர் ஆலோசனையின் பேரில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி பேரூராட்சி, திருவேடகம், மேலக்கால், காடுபட்டி, குருவித்துறை, மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், தென்கரை, இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம், ரிஷபம், சி.புதூர், சித்தாலங்குடி, திருவாலவாய நல்லூர்,நெடுங்குளம், கச்சைகட்டி, பூச்சம்பட்டி, கட்டக்குளம், குட்லாடம்பட்டி, செமினி பட்டி, ராமையன்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சோபியா தலைமையில் ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் இணைந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கணக்கெடுக்கும் பணி உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதியோடு நடைபெற்று வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கி பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தகுந்த ஆலோசனை வழங்கினார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!