சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி பங்கேற்பு..!

சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி பங்கேற்பு..!
X

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா

சோழவந்தான் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பாடலாசிரியர் மதன் கார்த்திக் பங்கேற்றார்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் கல்வி சர்வதேச பொது பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, கல்வி குழும பள்ளிகளின் தலைவர் முனைவர்.செந்தில்குமார், கல்வி குழும பள்ளிகளின் தாளாளர் குமரேஷ், கல்வி குழும பள்ளிகளின் இயக்குனர் செந்தில் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், பிரபல பாடல் ஆசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில், அமெரிக்கன் பள்ளியின் நிறுவனர் மோகனலட்சுமி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த விழாவில், 2023 - 2024 ஆண்டிற்கான கல்வி விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், பள்ளியின் சிறப்பு சுவர் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்வர் டயானா நன்றியுரை வழங்கினார்.

மதன் கார்க்கி பற்றி

மதன் கார்க்கி வைரமுத்து, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், ஆராய்ச்சி நிபுணர், மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழில்முனைவர். ஆஸ்திரேலியா குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் கார்க்கி, கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் துணைப் பேராசிரியராக தன்னுடைய தொழில்முறைப் பணிவாழ்க்கையைத் தொடங்கினார்.

விரைவில் அவர் தமிழ்த் திரையுலகுக்குள் நுழைந்தார். பாடலாசிரியராக, வசனகர்த்தாவாகப் பணியாற்றத் தொடங்கினார். 2013ன் தொடக்கத்தில் அவர் தன்னுடைய ஆசிரியப் பணியைத் துறந்தார். திரைத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றத் தொடங்கினார், அதேநேரத்தில் அவர் கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை (KaReFo) என்ற மொழிக் கணிமை மற்றும் மொழிக் கல்வியறிவு ஆகியவற்றில் முதன்மையாகக் கவனம் செலுத்தும் ஒரு கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தையும் தொடங்கினார்.

அவர் மெல்லினம் கல்வி நிறுவனத்தை தோற்றுவித்தார். இந்த நிறுவனம் குழந்தைகள் மத்தியில் கற்றலைப் பரவச்செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட கல்வி விளையாட்டுகள் மற்றும் கதைப் புத்தகங்களை உருவாக்குகிறது. அவர் உருவாக்கிய இன்னொரு நிறுவனம், டூபாடூ (DooPaaDoo) இந்த இணையம் சார்ந்த இசைத்தளமானது திரைப்பட இசை அல்லாத தனியிசையை முன்னிறுத்துகிறது, திரைப்பட இசைத் தொகுப்புகளை விநியோகிக்கும் ஓர் அமைப்பாகவும் செயல்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!