மதுரை பாலமேடு சாத்தையாறு அணை மதகுகள் சீரமைக்கும் பணி தொடக்கம்..!

மதுரை பாலமேடு சாத்தையாறு அணை மதகுகள் சீரமைக்கும் பணி தொடக்கம்..!
X

பாலமேடு சாத்தையாறு அணை யின் மதகுகள், சீரமைக்கும் பணி.

பாலமேடு சாத்தையாறு அணையில் மதகுகள் பழுது பார்க்கும் பணி தொடங்கப்பட்டது.

பாலமேடு சாத்தையாறு அணையில் மதகுகள் பழுது பார்க்கும் பணி தொடங்கப்பட்டது.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை கடந்த சில ஆண்டுகளாக அனை நீர் முழு கொள்ளளவை எட்டிய போதிலும் மதகுகள் பழுதால், அணை நீர் வீணாக வெளி யேறியது. இதனால், விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இதன் காரணமாக, அப்பகுதி பாசன வசதி பெரும் 11 கிராம கண்மாய்பாசன விவசாயிகள் மதகுகள் பழுதை விரைந்து சரி செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை சரிசெய்ய தமிழக அரசு ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணையில் உள்ள பழைய மூன்று மதகுகள் அகற்றப்பட்டு, ரூ.1 கோடியே10 லட்சம் மதிப்பீட்டில் மூன்று புதிய மதகுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், பருவமழை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பணிகள் விரைந்து முடிவு பெறும் பட்சத்தில் அணையில் மழைநீர் முழுவதுமாக தேக்கி வைக்கப்பட்டு ,விவாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படும் நேரத்தில் திறந்து விட சரியாக இருக்கும் எனவும், விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறி உள்ளதாகவும் அப்பகுதி பாசன வசதி பெறும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!