மதுரை அருகே நிரம்பி வழியும் ,சாத்தையாறு அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை அருகே நிரம்பி வழியும் ,சாத்தையாறு அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

மதுரை அருகே ,நிரம்பி வழியும் பாலமேடு சாத்தையாறு அணை.

பாலமேடு அருகே சாத்தையாறு அணை முழுதும் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தையாறு அணை. 29 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது சிறுமலை பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாகி அணை முழுவதும் நிரம்பி காணப்படுகிறது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகமாகி தற்போது மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் இந்த அனைமூலம் பாசனம் பெறும் கீழ சின்னனம்பட்டி எர்ரம்பட்டி பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக அணை நிரம்பும் தருவாயில் இருந்த போது ஷட்டரில் சிறிது பழுது ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக வெளியேறி வந்தது குறிப்பிடத்தக்கது பழுதடைந்த ஷட்டர்கள் சில நாட்களுக்கு முன்பாக சரி செய்யப்பட்டது

இனிவரும் காலங்களில் ஷட்டர் பழுது ஏற்படா வண்ணம் தண்ணீர் வெளியேறாமல் இருக்க பாதுகாக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதால் உரிய நேரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!