அலங்காநல்லூர் அருகே மரக்கன்றுகள் நடும் விழா
அலங்காநல்லூர் அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்று விழா நடைபெற்றது
அலங்காநல்லூர் அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்று விழா
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், வெளிச்சநத்தம் ஊராட்சியில், டோக் பெருமாட்டி கல்லூரி மற்றும் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் ஒரு மாணவி ஒரு மரம் நடுதல் திட்டம் மூலம் 75 மாணவிகள் 75 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. உன்னத் பாரத் அபியான், நாட்டு நலப்பணி திட்டம், மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி இந்த மர கன்று நடும் விழா நடைபெற்றது. இதற்கு, ஜானகி கணபதி தலைமை தாங்கினர். உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர்கள் லெட்சுமி, சக்தீஸ்வரி, மதுரை எங் இந்தியன்ஸ் காலநிலை பருவநிலை மாற்ற தலைவர் பொன் குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகாலட்சுமி, உன்னத் பாரத் அபியாண் உறுப்பினர் சோபிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவ பேரவை உறுப்பினர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள், முதுகலை சமூகபணியியல் மாணவிகள் 75 மரக்கன்றுகளை நட்டு மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் எடுத்துக் கூறினார். தொடர்ந்து, ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பறை இசை முழங்க பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல், உடல்நிலை குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை, முனைவர் சுஜாதா, அனிதா செல்வராஜ், மற்றும் பூங்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu