திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா.
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் குரு அக்ரோ டெக் நிறுவனர் ஜி. சண்முகம் 3000 சந்தனம், மகாகனி, ஈட்டி மரக்கன்றுகளை மாணவர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தார். ஓய்வுபெற்ற அரசு துணை விதை அலுவலர் பெருமாள் விழாவினை சிறப்பித்தார்.
கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த கல்லூரி துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் குரு அக்ரோ டெக் நிறுவனர் ஜி. சண்முகம் மாணவர்களிடையே மரம் வளர்த்தல் பற்றியும் உலக சுற்றுச்சூழல் பற்றியும் சிறப்புரை ஆற்றினார். ஒவ்வொரு மாணவருக்கும் மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டது. விவேகானந்த கல்லூரியின் பச்சை அட்டை திட்டத்தில் (Green Card Scheme) மாணவர்கள் அவர்தம் கிராமங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தாங்கள் பெற்ற மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் வேண்டும். மாணவர்கள் மரக்கன்று நடுதல் பற்றிய உறுதிமொழியினை வரலாற்றுத் துறை பேராசிரியர் முருகன் வாசிக்க உறுதி எடுத்துக்கொண்டனர்.
உடற்கல்வி துறைத் தலைவர் முனைவர் சீனி முருகன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் சந்திரசேகரன், முனைவர் காமாட்சி, முனைவர் திருப்பதி, கணேசன், முனைவர் பிரேமானந்தம், முனைவர் சௌந்தரராஜூ, மாரிமுத்து, முனைவர் மோகன்ராஜ், இரகு, முனைவர் எல்லைராஜா, கார்த்திகேயன், தர்மானந்தம், முனைவர் பாலகிருஷ்ணன், முனைவர் குமாரசுவாமி, நாகராஜ், திரு. வேல்முருகன், இருளப்பன் மற்றும் விடுதி துணைக்காப்பாளர்கள் செல்வகுமார், தமிழரசன் விழா ஏற்பாட்டினை கவனித்துக் கொண்டனர். வேதியல் துறை பேராசிரியர் முனைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu