சோழவந்தான் அருகே திருவேடகம் சாய்பாபா கோவில் ஆண்டு விழா..!
திருவேடகம், சாய்பாபா கோவில் ஆண்டு விழா.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், திருவேடகம் அருகே, வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ள சீரடி சாயிபாபா கோவிலில், 15 ஆம் ஆண்டு வருடா பிஷேக விழா நடைபெற்றது. வருடாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 3ஆம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை விக்னேஸ்வர பூஜையுடன் யாகவேள்வி தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து, பூர்ணாகதி சதுர்வேத பாராயணம், நடைபெற்று மகா தீபாரதனையுடன் முதல் கால யாக பூஜை நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து, 4ம் தேதி காலை 10 மணிக்கு மேல் இரண்டாவது கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 12 மணி அளவில் கடம் புறப்பாடாகி 15 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சாய்பாபாவுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. தீபாராதனை காட்டப்பட்டது . கோவில் மண்டபத்தில், பொது மக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
சாய்பாபா வரலாறு
சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் முழுமையாக கிடைக்கப்பெறாததால் இன்றுவரை அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் தெரியாமலேயே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே இரண்டு மதத்தினரும் சாய்பாபாவை வழிபாட்டு வருகின்றனர்.
அவருக்குப் 16 வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அதன் பின்னரே அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu