மதுரை அருகே பேருந்துவிபத்து: இருவர் உயிரிழப்பு, 35 பேர் பலத்த காயம்

மதுரை அருகே பேருந்துவிபத்து: இருவர் உயிரிழப்பு,  35 பேர் பலத்த காயம்
X

பைல் படம்.

நாகமலை புதுக்கோட்டை சுற்றுச்சாலையில், தனியார் பேருந்து மோதாமல், நிலை தடுமாறி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்

தேனி நோக்கி சென்ற அரசு பேருந்து, நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து, மதுரையில் இருந்து போடி சென்றது. முன்னால் சென்ற அரசு பேருந்து மீது மோதாமல் இருக்க, நிலை தடுமாறி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் ,பயணம் செய்த பயணிகள் இருவர் உயிரிழந்தனர். மற்றும் 35க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேரையூர் தாலுகா, ராமநாதபுரம் தெற்குதெருவை சேர்ந்த பிச்சை (வயது 65). எழுமலை ,மேலத் திருமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த குருசாமி (வயது 70). ஆகிய இருவரும் பேருந்து கவிழ்ந்த சம்பவ இடத்துலேயே பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் ,35க்கும் மேற்பட்டோர லேசான முதல் படுகாயம் மடைந்தனர். இவர்களை 108 மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் இறந்த உடல் கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து, சமயநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

விபத்து குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தனியார் பேருந்து அரசு பேருந்து காட்டிலும் அதிக அளவு வசூல் ஈட்டுவதற்காக அதிக அளவு ஆட்களை ஏற்றுவதும், அதிவேகத்தில் செல்வதும் கவனம் செலுத்துவதாகவும், பயணிகள் நலன் காக்க எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை எனவும் , குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்

இதுபோன்ற தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது எனவும், இதனை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது எனசமூக ஆர்வலர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!